×

மாவட்ட அளவிலான கபடி போட்டி திருநயினார்குறிச்சி பெண்கள் அணிக்கு முதல் பரிசு

நாகர்கோவில், ஆக. 31: ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளத்தங்கரையில் ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது. ஆண்கள், பெண்கள் என இரு பிரிவாக நடந்த போட்டியில் பெண்கள் பிரிவில் திருநயினார்குறிச்சி, ெலட்சுமிபுரம், மூங்கில்விளை, ஆர்எம்விகேசி, ஜேஆர்கேசி கோட்டவிளை, சாமி கபடி கிளப், சூரப்பள்ளம், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அம்பலப்பள்ளி ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதி போட்டியில் திருநயினார்குறிச்சி அணியும், சாமி கபடி கிளப் அணியும் மோதியது. 32-24 என்ற புள்ளி கணக்கில் திருநயினார்குறிச்சி அணி வெற்றிப்பெற்று முதல் பரிசை பெற்றது. சாமி கபடி கிளப் அணி 2ம் பரிசையும், ஆர்எம்விகேசி 3வது பரிசையும், லெட்சுமிபுரம் அணி 4ம் பரிசையும் பெற்றது. ஆண்கள் பிரிவில் உண்ணாமலைக்கடை அணி முதல் பரிசை பெற்றது. வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

The post மாவட்ட அளவிலான கபடி போட்டி திருநயினார்குறிச்சி பெண்கள் அணிக்கு முதல் பரிசு appeared first on Dinakaran.

Tags : kabaddi ,Tirunayanarkurichi girls ,Nagercoil ,Level Kabaddi Tournament 2 ,Isha Budhuthuvu Cup ,Alathankarai ,Rajakamangalam… ,District Level Kabaddi Tournament ,Tirunayanarkurichi ,Girls ,Dinakaran ,
× RELATED குளத்தூரில் கபடி போட்டி இ.வேலாயுதபுரம் அணி முதலிடம்