×

விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பொதுச் செயலாளரும் விழுப்புரம் எம்பி.,யுமான ரவிக்குமார், முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், ஏ.சி.பாவரசு, எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, துணை பொது செயலாளர்கள் எழில் கரோலின், ரஜினிகாந்த், தலைமை நிலைய செயலாளர்கள் இளஞ்சேகுவேரா, தகடூர் தமிழ்செல்வன், பாலசிங்கம் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் விசிக சார்பில் அகில இந்திய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் வகையில் திருச்சியில் நடைபெற உள்ள ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் நிர்வாக சீரமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

The post விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Visiga District ,Meeting ,Chennai ,Liberation Leopards Party ,Ambedkar Tiddha ,Ashok Nagar, Chennai ,Vic District Secretaries Meeting ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...