×

தமிழகத்தில் நல்ல மழை பெய்ய கோயில், தேவாலயம், மசூதிகளில் யாகம், சிறப்பு பிரார்த்தனை

குளித்தலை, ஆக.30: காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவரும் கோயமுத்தூர் மண் மற்றும் பயிர் மேலாண்மை மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இயக்குனருமான வளையப்பட்டி ஜெயராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: செப்டம்பர் ஒன்று முதல் ஏழாம் தேதிக்குள்ளும் கர்நாடகாவில் செப்டம்பர் ஏழாம் தேதிக்குப் பிறகு நல்ல மழைபெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாடு அரசு கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மழைபெய்வதற்காக கோயில்களில் யாகங்கள் மற்றும் பூஜைகள் ஏற்கனவே ஒருமுறை செய்து தமிழ்நாடு முழுவதும் நல்ல மழைபெய்தது.

நடப்பு தென்மேற்கு பருவமழை (ஜூன்-செப்டம்பர்) கேரளாவில் செப்டம்பர் ஒன்று முதல் ஏழாம் தேதிக்குள்ளும், கர்நாடகாவில் செப்டம்பர் ஏழாம் தேதிக்கு பிறகு நல்ல மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரவும் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து அணைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிய எல்லாம் வல்ல இறைவனை யாகங்கள் மற்றும் பூஜைகள் மூலம் வழிபாடு செய்ய வேண்டும். செப்டம்பர் கேரளாவிலும், கர்நாடகாவிலும் மற்றும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவத்தில் நல்ல மழை பெய்ய தமிழ்நாடு அரசு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் யாகங்கள் பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்ய தக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்தில் நல்ல மழை பெய்ய கோயில், தேவாலயம், மசூதிகளில் யாகம், சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kulithlai ,Cauvery Basin Farmers Federation ,Coimbatore Soil and Crop Management Center ,Tamil ,Nadu ,Agriculture ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...