×

அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டிக்கு வருமான வரி,இந்திய ராணுவ அணி தகுதி

 

கோவை, ஆக. 29: பிஎஸ்ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து இந்திய வங்கி அணி விளையாடியது. இதில் வருமான வரி அணி 106-84 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ராணுவ அணியை எதிர்த்து, இந்திய கப்பல் படை அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 88-70 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

The post அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டிக்கு வருமான வரி,இந்திய ராணுவ அணி தகுதி appeared first on Dinakaran.

Tags : Indian Army Team ,All India Basketball Finals ,Coimbatore ,All India Basketball ,PSG Cup ,Coimbatore Nehru Stadium ,All India Basketball Final ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்