×

இந்தியாவில் இருந்து 9.2 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யும் இலங்கை: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொழும்பு: இந்தியாவில் இருந்து 9.2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது. இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இலங்கையில் முட்டைக்கு அதிகரித்துள்ள தேவையை கருத்தில் கொண்டு இந்தியாவிடம் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவெடுத்தது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து பல கோடி முட்டைகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் ஏற்படும் விலை ஏற்ற, இறக்கங்களை சமாளித்து மலிவு விலையில் மக்களுக்கு முட்டை கிடைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து 9.2 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் இருந்து 9.2 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யும் இலங்கை: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,India ,Colombo ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...