×

தஞ்சாவூர் அருகே மயான கொட்டகையால் சாலை விரிவாக்க பணி பாதிப்பு வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு

 

தஞ்சாவூர், ஆக. 29: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை துறை மூலம் வல்லத்தில் இருந்து தென்னமநாடு வரை சுமார் 22 கி.மீ தூரம் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மார்க்கமாக திருச்சி, புதுக்கோட்டை, வல்லம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், தமிழ் பல்கலைக்கழகம், ஏர்போர்ட் தேசிய உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. மருங்குளம் நான்கு ரோடு ஓரத்தில் 100 ஆண்டு பழமையான மயான கொட்டகை அமைந்துள்ளது.

இந்த மயான கொட்டகை சாலையை ஒட்டி இருப்பதால் சாலை விரிவாக்கப்பணி தற்போது மயான கொட்டை அமைந்துள்ள இடம் வரை மட்டும் போடப்பட்டு பாதியில் நிற்பதால் அப்பகுதி மக்களும்,வாகன ஓட்டிகளும், மிகவும் அவதிபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் மயான கொட்டகையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தர சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை ஓரத்தில் இருக்கும் மயான கொட்டகையை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்றித்தர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

The post தஞ்சாவூர் அருகே மயான கொட்டகையால் சாலை விரிவாக்க பணி பாதிப்பு வேறு இடத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Valla ,Thannamanad ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...