கரூர், ஆக. 29: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி பிள்ளபாளையம் பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: பிள்ளபாளையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக நார் தொழிற்சாலை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆலை செயல்படத் துவங்கும் போது, எந்தவிதமான பிரச்னையும் இருக்காது என நினைத்திருந்தோம். ஆனால், இதில், கொட்டப்படும் தேங்காய் நார் கழிவுகளால் நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.
இதன் காரணமாக அருகில் உள்ள கிணறுகளின் தண்ணீரும் நிறம் மாறி வருகிறது. இரவு நேரத்திலும் ஆலை செயல்படுவதால் பல்வேறு பாதிப்புகளை இன்னல்களை சந்தித்து வருகிறோம். மேலும், இதே பகுதியில் மற்றொரு தொழிற்சாலையும் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், மேலும் பல்வேறு பாதிப்புகள் அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிய தொழிற்சாலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post பிள்ளபாளையத்தில் நார் தொழிற்சாலையால் இன்னலில் தவிக்கிறோம் appeared first on Dinakaran.
