×

குஜராத்தில் அதானி மின் நிறுவன முறைகேடு விசாரணை தேவை: ஆம் ஆத்மி வலியுறுத்தல்

புதுடெல்லி: குஜராத்தில் அதானி பவர் முந்திரா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மின்சார கொள்முதலுக்காக செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் ஐந்து ஆண்டுகளாக மாநில அரசு சார்பில் அதிக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.பாஜ தலைமையிலான அரசானது ரூ.3900 கோடியை அதிகமாக செலுத்தியுள்ளதாக கடந்த சனியன்று மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் இதே குற்றச்சாட்டை ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த எம்பி சஞ்சய் சிங், ‘‘அமலாக்கத்துறை எங்கே? சிபிஐ எங்கே? மேற்கு வங்கம், தெலங்கானா வரை துள்ளி குதித்து வருகிறீர்கள். ஆனால் குஜராத்தில் ஊழல் நடப்ப்தை உங்களால் பார்க்க முடியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்றார். இந்த குற்றச்சாட்டை குஜராத் அரசு மறுத்துள்ளது.

The post குஜராத்தில் அதானி மின் நிறுவன முறைகேடு விசாரணை தேவை: ஆம் ஆத்மி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Adani ,Aadmie ,New Delhi ,Adani Power Mundra Ltd ,Gujarat ,Dinakaran ,
× RELATED அதானிக்கு எதிராக போராடியதால் கிறிஸ்தவ சபை வங்கி கணக்கு முடக்கம்