×

சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து 2018ம் ஆண்டு, சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து நடிகரும், எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல, கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக ராஜரத்தினம் என்பவரும் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர்,ஐகோர்ட், உச்ச நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

The post சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Chennai ,
× RELATED பெண் பத்திரிகையாளர்கள் குறித்த...