×

“ஸ்லிம்” விண்கலத்தின் ஏவுதலை நிறுத்தியது ஜப்பான்: சந்திரனுக்கு லேண்டரை அனுப்பும் முயற்சிக்கு பின்னடைவு

ஜப்பான்: சந்திரனுக்கு லேண்டரை கொண்டு செல்லும் விண்கலத்தின் திட்டமிடப்பட்ட ஏவுதலை மோசமான வானிலை காரணமாக ஜப்பான் நிறுத்திவைத்துள்ளது. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸ்சா சந்திராயன் குறித்து ஆய்வு பணிகளுக்காக “ஸ்லிம்”என்ற விண்கலத்தை செலுத்த திட்டமிட்டது. எடை குறைந்த லேண்டர் மற்றும் எக்ஸ்ரே செயற்கைகோளுடன் அது விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஸ்லிம் விண்கலம் நிலவை அடைய 4 முதல் 6 மாதங்கள் ஆகும் என தெரிவித்த ஜப்பான் விஞ்ஞானிகள் நிலவில் துல்லியமாக தரையிறங்கும் நுட்பங்களை ஆராய்வதே இதன் நோக்கம் என கூறியிருந்தனர். இந்த திட்டத்திற்கு மூன் ஸ்வைப்பர் என்று பெயர் இடப்பட்டிருக்கும் விஞ்ஞானிகள் ஆகஸ்ட் 26ம் தேதி ஸ்லிம் விண்கலத்தை சந்திரனுக்கு ஏவ திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் ஏவுதல் ரத்து செய்யப்பட்ட நிலையில் 28ம் தேதியான இன்று காலை விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இன்றும் வானிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால் லேண்டரை விண்வெளிக்கு செலுத்தும் பணியை நிறுத்துவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. “ஸ்லிம்” விண்கலத்தை ஏவும் நாள் மற்றும் நேரம் குறித்த மறு அறிவிப்பு விரைவில் வெளியிப்பிடப்படும் என ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The post “ஸ்லிம்” விண்கலத்தின் ஏவுதலை நிறுத்தியது ஜப்பான்: சந்திரனுக்கு லேண்டரை அனுப்பும் முயற்சிக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Japan ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...