×

சில்வார்பட்டி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க கோரிக்கை

 

தேவதானப்பட்டி, ஆக. 28: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் ஊருக்குள் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், சில்வார்பட்டி, பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, தர்மலிங்கபுரம், எருமலைநாயக்கன்பட்டி, கதிரப்பன்பட்டி, உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சில்வார்பட்டியில் சாலையில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு செல்வார்கள்.

இந்நிலையில் சரக்கு வாகனம், வேன், கார், சுற்றுலா வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி நேரங்களில் பள்ளி மாணவர்கள் சாலையில் பயந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சாலையில் செல்லும் அதிவேக வாகனங்களால் டூவிலர் மற்றும் சைக்கிளில் செல்வோர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இது தவிர அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது. ஆகையால் சில்வார்பட்டி ஊருக்குள் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

The post சில்வார்பட்டி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Silwarpatti Road ,Silwarpatti ,Devadanapatti ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி அருகே விளைநிலங்களுக்கு செல்ல சாலை அமைக்க கோரிக்கை