×

நாமக்கல்லில் பைக் திருடன் கைது

 

நாமக்கல், ஆக.28: நாமக்கல்லை அடுத்த பொம்மசமுத்திரம் அருகே பெருமாப்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வினோத்குமார் (35). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி மதியம், நாமக்கல் துறையூர் ரோட்டில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோர் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். மாலையில் அங்கு சென்ற போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து வினோத்குமார் நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த பைக் திருட்டில் ஈடுபட்ட, பெரம்பலூரை சேர்ந்த அரிஹரன் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கள்ளச்சாவி மூலம் வினோத்குமாரின் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலான பூட்டுகளை மாற்றி கொள்ள வேண்டும். பைக் திருடர்கள் பூட்டின் சைசை வைத்து கள்ளச்சாவி போட்டு திருடி செல்வதால், வாகன ஓட்டுனர்கள் பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தும் போது, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் கேட்டுகொண்டுள்ளனர்.

The post நாமக்கல்லில் பைக் திருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ramasamy ,Vinodkumar ,Perumavatti ,Pommasamudram ,Namakkalla ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை