×

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான்: கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

திருவள்ளூர், ஆக. 28: திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே எய்ட்ஸ், காச நோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, ரெட் ரன் மாரத்தானை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், ரோட்டரி சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய மினி மாரத்தான் போட்டி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், காச நோய் பிரிவு துணை இயக்குனர் சங்கீதா, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அழகு மாவட்ட திட்ட மேலாளர் கௌரிசங்கர் மேற்பார்வையாளர் பபிதா மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் விழிப்புணர்வு ரெட் ரன் மாரத்தான்: கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Awareness Red Run Marathon ,District AIDS Control Unit ,Thiruvallur ,Tiruvallur District AIDS Control Center ,District Administration ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...