×

வியாசர்பாடியில் மளிகை கடை சூறையாடல் போதை நபர் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பள்ளத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 54வது பிளாக்கில் மளிகை கடை நடத்தி வருகின்றார். நேற்றிரவு 9 மணி அளவில், மளிகை கடையின் எதிர் வீட்டில் வசித்துவரும் தமிழழகன் (42) என்பவர் குடிபோதையில் மளிகை கடைக்கு வந்து 100 ரூபாய் கேட்டபோது மாரியப்பன், ‘’பணம் தர முடியாது’’ என கூறியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தமிழழகன், மளிகை கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து தமிழழகனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வியாசர்பாடியில் மளிகை கடை சூறையாடல் போதை நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vyasarbadi ,Perampur ,Mariappan ,Vyasarbadi Valley, Chennai ,Vyasarbadi Satyamurthi Nagar 54th Block ,
× RELATED மதுபானம் விற்ற பெண் கைது