×

கடம்பூர் ராஜு எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

கயத்தாறு,ஆக.27: மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் கடம்பூர் ராஜு எம்எல்ஏ முன்னிலையில் அவரது சொந்த ஊரான சிதம்பராபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டை மற்றும் கட்சி வேட்டிகளை வழங்கி கடம்பூர் ராஜு எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், இணைச்செயலாளர் நீலகண்டன், மாணவரணி நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கடம்பூர் ராஜு எம்எல்ஏ முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Kadampur Raju MLA ,Gayathur ,Vlathikulam ,Dinakaran ,
× RELATED கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முன்னிலையில்...