×

முட்டை விலை மேலும் 20 காசு குறைந்தது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 10 காசுகள் என்இசிசி குறைத்தது. இந்த நிலையில் நேற்று, மேலும் 20 காசுகள் முட்டை விலையை என்இசிசி குறைத்துள்ளது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 450 காசில் இருந்து 430 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை குறைந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இந்த மாதத்தின் துவக்கத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. உயர்ந்த வேகத்தில் முட்டை விலை, மறுபடியும் படிப்படியாக குறைந்து வருவதால், கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

The post முட்டை விலை மேலும் 20 காசு குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,NECC ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...