×

திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

திருவள்ளூர்: கோளூர் பெரிய ஏரியில் அனுமதித்த அளவைவிட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 185 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியில் 50 நாட்களுக்கு 3 அடி ஆழத்துக்கு மட்டும் மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் பரத் 5 அடிக்கு மேல் மண் அள்ளுவதாக பொன்னேரி கோளூர் கிராம விவசாயிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். மண் அள்ளுவதற்கு தடை விதிக்கவும், மண் அள்ள அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விதிக்கப்பட்டிருந்தது.

The post திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Government of Tamil Nadu ,Thiruvallur ,Kolur ,Igourd ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...