×

அறிவியல் தொழில்நுட்பத்தை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு

 

காரைக்குடி, ஆக. 26: அறிவியல் தொழில்நுட்பத்தை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் சந்திராயன் 3 வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டுவிழா, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் தேசிய விருது பெற்றது மற்றும் குன்றக்குடி ஆதீனம் கல்வியியல் கல்லூரி வகுப்புகள் துவக்கவிழா என முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு கல்வியியல் கல்லூரி முதல்வர் செலின்அமுதா வரவேற்புரையாற்றினார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து பேசுகையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் இந்தியாவிலேயே அறிவியல் பரப்புனர் விருது பெற்ற மடாதிபதி. கடைக்கோடி மக்களுக்கும் அறிவியலை கொண்டு சேர்த்தவர். ஆன்மீக தளத்தில் இருந்து அறிவியல் தளத்தில் பயணிக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். கிராமப்புற மக்களின் வறுமையை விரட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்பட வேண்டும்.

சந்திராயன் 3 இந்தியா சாதனை படைத்தது அறிவியல் தொழில்நுட்பத்தின் பிரமாண்டமான வளர்ச்சி மகத்தான வெற்றி. அதைப்போல மண்ணில் நடந்து கொண்டு இருக்கிற ஏழை மனிதர்களின் வாழ்க்கை வெளிச்சத்திற்கும் அறிவியலும் ஆன்மீகமும் பயன்பட வேண்டும். என்றார். நிகழ்ச்சியில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் முனைவர் செந்தூர்குமரன், மக்கள் கல்வி நிலைய தலைவர் நாச்சிமுத்து, கல்வியியல்கல்லூரி நிர்வாக அலுவலர் ராமநாதன், பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அறிவியல் தொழில்நுட்பத்தை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kadakodi ,Kunrakkudi Ponnambala Adikalar ,Karaikudi ,Kunrakkudi ,Ponnambala Adigalar ,Katakodi ,Dinakaran ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...