×

ராகுலின் பேச்சு அபத்தமானது: பாஜ கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவில் சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி கூறுவது மிகவும் அபத்தமானது என பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரமற்ற, அபத்தமான கருத்துகளை வௌியிடுவதை ராகுல் காந்தி வழக்கமாக வைத்துள்ளார். 1952ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, சீனாவில் பட்டினியால் வாடிய ராணுவத்துக்கு 3,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியா சீனா உறவில் விரிசல் ஏற்பட தொடங்கிய சமயத்தில் சீன ராணுவத்துக்கு அரிசி அனுப்பியது. வரலாற்றில் மன்னிக்க முடியாத பெரும் குற்றம். டோக்லாம் நெருக்கடியின்போது ராகுல் காந்தி சீன தூதர்களை சந்தித்து பேசினார். இந்தியாவின் ராணுவ, ராஜதந்திர, பொருளாதார விவகாரங்களை அணுகுவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன்னெப்போதும் இல்லாத வெற்றியை பெற்றுள்ளது. பாஜவிடம் இருந்து காங்கிரஸ் இதை கற்று கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறினார்.

The post ராகுலின் பேச்சு அபத்தமானது: பாஜ கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rakulin ,Baja ,New Delhi ,Rahul Gandhi ,China ,India ,Raqulin ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு