×

கிளீவ்லேண்டு டென்னிஸ்; அரையிறுதியில் லின் ஸூ: கார்சியா அதிர்ச்சி தோல்வி

கிளீவ்லேண்டு: அமெரிக்காவின் கிளீவ்லேண்டு நகரில் நடக்கும் ‘டென்னிஸ் இன் தி லேண்டு’ மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட, சீன வீராங்கனை லின் ஸூ தகுதி பெற்றார். காலிறுதியில் பிரான்ஸ் நட்சத்திரம் கரோலின் கார்சியாவுடன் (29 வயது, 7வது ரேங்க்) மோதிய லின் ஸூ (29வயது, 48வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (20 வயது, 20வது ரேங்க்) உடன் மோதிய டடியானா மரியா (36 வயது, 49வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்துக்கு நீடித்தது.

ரஷ்ய வீராங்கனை இகடெரினா அலெக்சாண்ட்ரோவா (28 வயது, 22வது ரேங்க்) சுமார் 2 மணி நேரம் நீண்ட 3வது காலிறுதியில் 5-7, 6-0, 7-5 என்ற செட் கணக்கில் சீனாவின் சின்யூ வாங்கை (21 வயது, 25வது ரேங்க்) வீழத்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்க நட்சத்திரம் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (30 வயது, 38வது ரேங்க்) தனது காலிறுதியில் 1-6, 3-6 என நேர் செட்களில் ஸ்பெயினின் சாரா தொர்மோவிடம் (26 வயது, 48வது ரேங்க்) சரணடைந்தார். அரையிறுதியில் சாரா தொர்மோ – டடியானா மரியா, லின் ஸூ – அலெக்சாண்ட்ரோவா மோதுகின்றனர். யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், கிளீவ்லேண்டு தொடரில் முன்னணி வீராங்கனைகளின் அதிர்ச்சி தோல்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கிளீவ்லேண்டு டென்னிஸ்; அரையிறுதியில் லின் ஸூ: கார்சியா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Cleveland Tennis ,Lin Xu ,Garcia ,Cleveland ,in the Land ,Cleveland, USA ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை