×

தேனி நகராட்சி பகுதியில் பேவர்பிளாக் சாலைகளை ரூ.60 லட்சத்தில் சீரமைக்க முடிவு

தேனி, ஆக. 25: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேதமடைந்த பேவர்பிளாக் சாலைகளை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க நகராட்சி தீர்மானித்துள்ளது. தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான தெருக்களில் சிறிய தெருக்களில் பேவர் பிளாக் சாலைகள் நகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி தேனி நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் சுமார் 2 கிமீ நீளமுள்ள பேவர் பிளாக் சாலைகள் முதற்கட்டமாக சீரமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூ.60 லட்சத்தை 2023-24ம் நிதியாண்டின் பொது நிதியில் இருந்து செலவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி மூலம் சேதமடைந்துள்ள தேனி ஹைஸ்கூல் 2வது தெரு, அவ்வையார் தெரு, குறிஞ்சி நகர் 3 வது தெரு, காந்தி நகர் 5வது தெரு, மாரி 1வது தெரு, மதுரைவீரன் கோயில் தெரு,குளத்து 2வது குறுக்கு தெரு, நேதாஜிரோடு பழைய தந்தி அலுவலக தெரு, மிராண்டா சந்து 6வது தெரு, ராஜா சந்து வடக்கு குறுக்கு 2வது தெரு, போஸ்ட் ஆபிஸ் ஓடை 1வது தெரு, பாரஸ்ட் ரோடு 1வது குறுக்குத் தெரு, ஒயிட் ஹவுஸ் 2வது கிழக்கு குறுக்கு தெரு,

காளியம்மன்கோயில் கிழக்கு குறுக்கு சந்து, கொண்டு ராஜா சந்து 1வது தெரு, பாரஸ்ட்ரோடு 7வது முதல் குறுக்குத் தெரு, பாராஸ்ட் ரோடு 11வது தெரு, பாராஸ்ட் ரோடு ராஜா தோட்டம் 2வது தெரு, பாப்புராஜா சந்து வடக்குத் தெரு, சுப்பன் 1வது தெருவில் 1வது குறுக்கு சந்து, பங்களாமேடு விரிவாக்கப்பகுதியான சோலைமலைஅய்யனார் கோயில் மேற்கு குறுக்குத் தெரு, கருவேல்நாயக்கன்பட்டி மெயின்ரோடு கிழக்கு குறுக்குத் தெரு ஆகிய தெருக்களில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.

The post தேனி நகராட்சி பகுதியில் பேவர்பிளாக் சாலைகளை ரூ.60 லட்சத்தில் சீரமைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni Allinagaram ,Dinakaran ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு