சென்னை, ஆக. 25: வரலட்சுமி நோன்பு இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ₹900, முல்லை, ஜாதிமல்லி மற்றும் ஐஸ்மல்லி, கனகாம்பரம் ஆகியவை ₹600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரளி பூ 350, சாமந்தி 160, சம்பங்கி ₹250 பன்னீர்ரோஸ் ₹140, சாக்லேட்ரோஸ் ₹160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘ வரலட்சுமி நோன்பு என்பதால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அனைத்து பூக்களும் விற்பனை ஆகிவிடும் என்று நினைத்தோம். ஆனால் இரவு முழுவதும் மழை பெய்ததால் சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் வரவில்லை. இதனால் வியாபாரம் இல்லாமல் மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.’’ என்றார்.
காய்கறிகள் விலை சரிவு
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது. இதன்காரணமாக ஒரு கிலோ வெங்காயம் ₹26, சின்ன வெங்காயம் ₹40, நாட்டு தக்காளி முதல் தரம் ₹30, 2ம் தரம் ₹20, 3ம் தரம் ₹10, உருளைகிழங்கு ₹18, கேரட் ₹20, பீன்ஸ் ₹40, பீட்ரூட் ₹35, சவ்சவ் ₹13, முள்ளங்கி ₹18, முட்டைகோஸ் ₹15, வெண்டை ₹10, கத்தரிக்காய் ₹15, காராமணி ₹35, பாகற்காய் ₹30, புடலங்காய் ₹12, சுரக்காய் ₹10, சேனைக்கிழங்கு ₹45, முருங்கைக்காய் ₹20, சேனை கிழங்கு ₹25, காலிபிளவர் ₹10, பச்சைமிளகாய் ₹35, பட்டாணி ₹80, அவரை ₹20, பீரக்கங்காய் ₹30, எலுமிச்சைபழம் ₹35, நூக்கல் ₹13, கோவைக்காய் ₹32, கொத்தவரங்காய் ₹22, பச்சை குடமிளகாய் ₹30, வண்ண குடமிளகாய் ₹100, ஒரு கட்டு கொத்தமல்லி, புதினா ₹2க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பூக்கள் விலை ‘கிடுகிடு’: ஒரு கிலோ மல்லி ₹900 முல்லை ₹600 appeared first on Dinakaran.