×

பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறு சந்தேகம் இருந்தாலும் அதன் பலனை குற்றம்சாட்டப்பட்டவருக்கே தர வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால், பல சந்தேகங்களை முன்வைத்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்புகிறார். திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெறுவோம். மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தவே முயற்சி செய்வதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

The post பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : R. S.S. Bharati ,Chennai ,S.S. Bharati ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...