×

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்ததை அடுத்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் மற்றும் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் ஆகியோருக்கு இனிப்புகளை ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நாடே கொண்டாடி வருகிறது.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி தனது ஆய்வை தொடங்கி உள்ளது. ரோவர் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு நடத்துகிறது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நாடே கொண்டாடி வருகிறது.

இந்த சாதனையில் பங்குபெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகம் சென்று, சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

 

The post இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! appeared first on Dinakaran.

Tags : isro ,Karnataka ,Chief Minister Sidderamaiah ,Bangalore ,Bengaluru ,Chandrayaan ,Dinakaran ,
× RELATED பிஎஸ்எல்வி ராக்கெட்டை...