×

முதல்வர் பங்கேற்க உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

மயிலாடுதுறை, ஆக.24: மயிலாடுதுறையில் சைவத்தையும், தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் திருமடம் உள்ளது. இவ்வாதீனத்தால் 1946ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரே அமைந்துள்ளது. தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1988ம் ஆண்டு கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. இக்கல்லூரியின் 75ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. பவளவிழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 3000 பேர் அமரும் வகையில் 80அடி அகலமும் 220அடி நீளமும் கொண்ட பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு ரூ.10லட்சம் மதிப்பில் 12அடி நீளம் கொண்ட 5 ராட்சத மின்விசிறிகள் அமைக்கப்பட்ட கலையரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 24ம்தேதி திறந்து வைக்க உள்ளதாக தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் தருமையாதீன தொலைக்காட்சி வானொளி பதிவகத்தை திறந்து வைத்தும் பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். முதலமைச்சர் வருகை தர உள்ளதால் விழா ஏற்பாடுகள் குறித்து சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். தருமபுரம் ஆதீன கர்த்தரை சந்தித்து விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசனை செய்தார். அப்போது எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post முதல்வர் பங்கேற்க உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Meiyanathan ,Dharumapuram Atheenam Arts College ,Chief Minister ,Mayiladuthurai ,Dharmapuram Atheenam ,Saivism ,Meyyanathan ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...