×

தானியங்களை தாக்கும் மாவுப்பூச்சியை தடுப்பது எப்படி? பழநி வேளாண் துறை அட்வைஸ்

பழநி, ஆக. 24: நெல், கரும்பு, சிறு தானியங்களை தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பழநி வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி வட்டாரத்தில் நெல், கரும்பு, பருத்தி மற்றும் சிறு தானியங்கள், தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிர்களில் தற்போது மாவுப்பூச்சிகள் தென்படுகிறது. மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து பழநி வேளாண் துறையினர் கூறியதாவது: வயலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிப்டோளமஸ் பொறி வண்டுகளை ஏக்கருக்கு 600 எண்கள் வீதம் பயன்படுத்த வேண்டும். 5% வேப்பங்கொட்டை கரைசலை ஒட்டும் திரவத்துடன் கலந்து பயன்படுத்த வேண்டும். மேலும், ரசாயன மருந்துகளாக புரபனோபஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி, இமிடா குளேபிரிட் 0.5 மில்லி, தயோ மீத்தாக்சான் ஒரு கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். மருந்து தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை பயன்டுத்துவது அவசியம். மருந்தை சுழற்சி முறையில் பயன்டுத்துவதே சிறந்தது. இவ்வாறு கூறினர்.

The post தானியங்களை தாக்கும் மாவுப்பூச்சியை தடுப்பது எப்படி? பழநி வேளாண் துறை அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Palani Agriculture Department ,Palani ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கணுமா? வேளாண் துறையினர் விளக்கம்