- பெண்களுக்கான 100 மீ
- கேரி ரிச்சர்ட்சன்
- புடாபெஸ்ட்
- பெண்கள்
- உலக தடகள சாம்பியன்ஷிப்
- ஷே கேரி ரிச்சர்ட்சன்
- தின மலர்
புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், அமெரிக்க வீராங்கனை ஷ கேரீ ரிச்சர்ட்சன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் 100 மீட்டர் பைனலில், ஷ கேரி (23 வயது) 10.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். ஜமைக்கா வீராங்கனைகள் ஷரிகா ஜாக்சன் (10.72 விநாடி) வெள்ளிப் பதக்கமும், 2 முறை ஒலிம்பிக் சாம்பியன் ஷெல்லி ஆன் பிரேசர் பிரைஸ் (10.77) வெண்கலமும் வென்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஷ கேரி வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏற்கனவே 4 வீராங்கனைகள் 10.65 விநாடிகளில் கடந்து தங்கம் வென்று படைத்த சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
The post மகளிர் 100 மீ. ஓட்டம் தங்கம் வென்றார் ஷ கேரீ ரிச்சர்ட்சன் appeared first on Dinakaran.