×

பக்தர்கள் உடைமைகளை எளிதில் டெபாசிட் செய்து பெற திருப்பதியில் ரூ.3 கோடியில் கியூஆர் கோடு தொழில்நுட்பம்

திருமலை: திருப்பதி வரும் பக்தர்கள் தங்களது உடைமை மற்றும் மொபைல் போன்களை விரைவாகவும், எளிதாகவும் டெபாசிட் செய்து திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் ரூ.3 கோடியில் பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் பெயரில் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தை திருமலை அன்னமய்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தர்மா நேற்று தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோருடன் இணைந்து செயல் அதிகாரி தர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது :

பக்தர்கள் கவுண்டருக்கு வந்ததும், தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் ஆட்டோமெட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும். அதேபோல், மொபைல் டெபாசிட் செய்யும் போது, கியூஆர் கோடு குறியீட்டுடன் இணைத்து, ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் உைடமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பக்தர்கள் உடைமைகளை எளிதில் டெபாசிட் செய்து பெற திருப்பதியில் ரூ.3 கோடியில் கியூஆர் கோடு தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,
× RELATED பல நூறு கோடி முறைகேடு செய்து விட்டு...