×

போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு

 

கோவை, ஆக.22: கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக ராஜராஜன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக பணியாற்றி வந்த மதிவாணன் சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனர் ராஜராஜன் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட ராஜராஜனுக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Traffic ,Coimbatore ,Rajarajan ,Coimbatore Traffic Police ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்