×

ஷெரீப் காலனியில் குடிநீர் குழாய் அமைப்பு பணி துவக்கம்

 

திருப்பூர், ஆக.22: ஷெரிப் காலனியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் துவக்க விழா செல்வராஜ் எம்எல்ஏ துவங்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழா திருப்பூர் ஷெரீப் காலனி பகுதியில் நேற்று நடந்தது. இதனை தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ஷெரீப் காலனியில் குடிநீர் குழாய் அமைப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sharif Colony ,Tirupur ,Sharif Colony Selvaraj ,
× RELATED திருமூர்த்தி குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு