×

ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மாதவரம் ரெட்டேரியை புனரமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மாதவரம் ரெட்டேரி 380 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மழை காலத்தில் சுற்று வட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இந்த ஏரியில் சேமிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் சமநிலையில் இருந்து வருகிறது. இந்த ரெட்டேரியை தூர்வாரி சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் இந்த ஏரியில் ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் முன்பக்க கரையமைத்து, ஜிஎன்டி சாலையில் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டது.

மேலும், ஏரியை ஆழப்படுத்தி, நடுவே 3 மண் திட்டுகள் அமைப்பதோடு, கரையில் நடைபாதையும், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல இரும்புக் கைப்பிடியையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு தலைமை பொறியாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், உதவி பொறியாளர் கௌரிசங்கர், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.43.19 கோடி மதிப்பீட்டில் மாதவரம் ரெட்டேரியை புனரமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Madhavaram Rederi ,MLA ,Tiruvottiyur ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...