×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரமோற்சவம்: அக்டோபர் 15 முதல் 23 வரை நவராத்திரி பிரமோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரமோற்சவமும், அக்டோபர் 15 முதல் 23 வரை நவராத்திரி பிரமோற்சவமும் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு வருடாந்திர பிரமோற்சவம் செப்டம்பர் 18 முதல் 26 வரையிலும், நவராத்திரி பிரமோற்சவம் அக்டோபர் 15 முதல் 23 வரையிலும் நடைபெறவுள்ளது.

வருடாந்திர பிரமோற்சவத்தில் முக்கியமாக செப்டம்பர் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும், செப்டம்பர் 22ம் தேதி கருட வாகன சேவையும், 23ம் தேதி தங்க ரதம், 25ம் தேதி ரத உற்சவம் (தேர்), 26ம் தேதி சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும், அன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறும். நவராத்திரி பிரமோற்சவத்தில் கொடியேற்றம் இருக்காது. இதில் முக்கிய நிகழ்சாக அக்டோபர் 19ம் தேதி கருடவாகனம், 22ம் தேதி தங்கரதம், 23ம் தேதி சக்ரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற உள்ளது.

பிரமோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் 18 முதல் 26 வரையிலும், அக்டோபர் 15 முதல் 23 வரையிலும் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, சகஸ்ர தீப அலங்கர சேவைகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டிய ஆர்ஜித பிரமோற்சவம் சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் நியமிக்கப்பட்ட வாகன சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அக்டோபர் 14ம் தேதி அங்குரார்பணம் நடைபெறும் என்பதால் அன்று சகஸ்ர தீப அலங்கார சேவையை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 18 முதல் 26 வரை வருடாந்திர பிரமோற்சவம்: அக்டோபர் 15 முதல் 23 வரை நவராத்திரி பிரமோற்சவம் appeared first on Dinakaran.

Tags : Annual Promotsavam ,Tirupati Eyumalayan Temple ,Navratri Promotsavam ,Tirumala ,Tirupati Eemumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப். மாதத்தில் ரூ.101 கோடி உண்டியல் காணிக்கை..!!