×

பிரபல மலையாள நடிகை மரணம்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் உணர்த்துபாட்டு என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் கனக லதா (63). அதன் பிறகு ஆத்யத்தெ கண்மணி, கவுரவர், ராஜாவின்டெ மகன், ஜாக்ரதா, ஆகாசகங்கா, ஹரிகிருஷ்ணன்ஸ் உள்பட 360க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ஸ்மார்ட் பாய்ஸ், இலை, கடவுள் சாட்சி, எனக்காக பிறந்தேன் உள்பட படங்களில் நடித்து உள்ளார். மலையாளம், தமிழ் உள்பட 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகை கனக லதாவுக்கு கடந்த வருடம் பார்க்கின்சன்ஸ் என்ற பாதிப்பு நோய் ஏற்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று இரவு திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வைத்து நடிகை கனகலதா மரணமடைந்தார்.

The post பிரபல மலையாள நடிகை மரணம் appeared first on Dinakaran.

Tags : Kanaka ,Adyate Kanmani ,Rajavinte Mahan ,
× RELATED நல்லன எல்லாம் தரும் நாராயண மந்திரம்!