- தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்
- பிஆர்எஸ் கட்சி
- சந்திரசேகர் ராவ்
- திருமலா
- முதல் அமைச்சர்
- தெலுங்கானா
- தெலுங்கானா...
திருமலை: தெலங்கானாவில் உள்ள 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். அவர் 2 தொகுதியில் போட்டியிடுகிறார். தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே ஆளும் பிஆர்எஸ் கட்சி தேர்தல் பிரசார ஓட்டத்தில் போட்டியை தொடங்கியுள்ளது. ஐதராபாத் தெலங்கானா பவனில் நடந்த நிகழ்ச்சியில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று அறிவித்தார். இதில் ஒரே நேரத்தில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் மட்டும் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இம்முறையும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறிய கேசிஆர் 7 தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை.
பின்னர் முதல்வர் சந்திரசேககர்ராவ் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று ஹாட்டிரிக் வெற்றியுடன் மூன்றாவது முறை ஆட்சி அமைப்போம். ரங்கா ரெட்டி மற்றும் ஐதராபாத் மாவட்டங்களில் பிஆர்எஸ் மற்றும் மஜ்லிஸ் கட்சியுடன் இணைந்து 29 இடங்களில் வெற்றி பெறுவோம். மஜ்லிஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையிலான நட்புறவான சூழல் எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தெலங்கானா பேரவை தேர்தல் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பிஆர்எஸ் கட்சி: சந்திரசேகர் ராவ் 2 தொகுதியில் போட்டி appeared first on Dinakaran.
