×

சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க புது முயற்சி: குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குக்கு பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு

சென்னை: தாம்பரம் அருகே படப்பையில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கு பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து செல்போன் விளையாட்டிலேயே மூழ்கியுள்ளனர். இந்த செல்போன் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், நகர வாழ்க்கையில் விளையாட போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் செல்போன்களில் மூழ்குவது அதிகரித்து வருவதால் படப்பையில் குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கு தொடங்கப்பட்டுள்ளது. இதனை குழந்தை நட்சத்திரம் ஆல்யா திறந்து வைத்து துள்ளிக்குதித்து விளையாடினார். சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க உள்விளையாட்டு அரங்கை நாடும் பெற்றோர் இதனால் தங்கள் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டை தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும் இந்த உள்விளையாட்டு அரங்கம் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

The post சிறுவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க புது முயற்சி: குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குக்கு பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pathapil ,Thambaram ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி 4, 5வது...