×

உத்தரபிரதேசத்தில் கோசி இடை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் மீது மர்ம நபர்கள் இங்க் தெளித்ததால் பரபரப்பு..!!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தின் கோசி பகுதி இடை தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற பாஜக வேட்பாளர் மீது மை தெளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் மாவ்மாவட்டம் கோசி தொகுதியில் செப்டம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் அவர் பேரணியில் ஈடுபட்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் அவர் மீது மை தெளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மை கண்ணில் பட்டதால் தாரா சிங் சிறிது நேரம் அவதிபட்டார். பின்னர் பேசிய அவர் தன் மீது மை தெளிக்கப்பட்டது சமாஜ்வாதி கட்சியினரின் சதி என்றார்.

The post உத்தரபிரதேசத்தில் கோசி இடை தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர் மீது மர்ம நபர்கள் இங்க் தெளித்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Stirma ,BJP ,Kosi mid-election campaign ,Uttar Pradesh ,Kosi ,-election ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...