×

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாநில கல்வி வாரியங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 3வது இடத்தில் தமிழ்நாடு

புதுடெல்லி: மாநில கல்வி வாரியங்களில் இருந்து கடந்த 5 ஆண்டில் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வை இந்த ஆண்டு 20.38 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளிலும், நீட் தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களாகவே உள்ளனர். இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 5.51 லட்சம் பேர் ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள்.

அதே சமயம், மாநில கல்வி வாரியத்தில் படித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையை மகாராஷ்டிரா மாநிலம் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டில் மாநில கல்வி வாரியத்தில் படித்து அதிக அளவில் நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு 2.57 லட்சம் மாணவர்கள் மகாராஷ்டிரா மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் ஆவர். அடுத்த இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது.

அங்கு இந்த ஆண்டு 1.22 லட்சம் மாணவர்களும், கடந்த ஆண்டு 1.14 லட்சம் மாணவர்களும் மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் ஆவர். மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து மாநில கல்வி வாரியத்தில் படித்த 1.13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். உபியில் 1.11 லட்சம் பேரும் கேரளாவில் 1.07 லட்சம் பேரும் பீகாரில் 71,000 பேரும் மாநில கல்வி வாரியத்தில் படித்த மாணவர்கள் ஆவர். குறைந்தபட்சமாக, திரிபுரா மாநில கல்வி வாரியத்தில் 1,683, மிசோரமில் 1,844, மேகாலயாவில், 2,300 மாணவர்கள் மாநில கல்வி வாரியத்தில் படித்தவர்கள் ஆவர்.

The post நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாநில கல்வி வாரியங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா: 3வது இடத்தில் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Tamil Nadu ,New Delhi ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...