×

லாரி மீது மோதி காயம் அடைந்த 7 பேர் மீட்பு சிலிண்டர் வெடித்ததில் கருகியது ஆம்புலன்ஸ்

காவேரிப்பாக்கம்: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்றபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் படுகாயமடைந்த 7 பேரை அப்பகுதியினர் மீட்டனர். சிறிது நேரத்தில் காஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் கருகியது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா(70). உடல் நிலை சரியில்லாததால் நேற்றுமுன்தினம் இரவு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துக்கொண்டு அவரது 2 மகன்கள், உறவினர் பெண்கள் 2 பேர் புறப்பட்டனர். மருத்துவ உதவியாளர் ஒருவரும் இருந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பெரும்புலிப்பாக்கம் அருகே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் ஆம்புலன்ஸ்சின் முன் பக்கம் நொறுங்கியது. டிரைவர் சிவா உட்பட 7 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அவளூர் போலீசார் வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஆம்புலன்சில் இருந்து காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஆம்புலன்ஸ் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து கருகியது. அப்பகுதியில் இருந்தவர்கள் விலகி ஓடியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

The post லாரி மீது மோதி காயம் அடைந்த 7 பேர் மீட்பு சிலிண்டர் வெடித்ததில் கருகியது ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Cauverypakkam ,Andhra ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...