×

அதிபர் தேர்தல் சிங்கப்பூர் இந்திய வம்சாவளி தருமன் போட்டியிட தகுதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாக்கோபின் 6 ஆண்டு கால பதவி காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அதிபர் தேர்தலில் ஒருவருக்கு மேல் போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலை செப்டம்பர் 1ம் தேதி நடத்துவதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த தருமன் சண்முகரத்தினம் கடந்த 3 ஆண்டுகளாக வகித்து வந்த அமைச்சர் பதவி மற்றும் பொதுவாழ்வு பதவிகளை துறந்தார்.

இவர் கடந்த 2011-2019ம் கால கட்டத்தில் கல்வி அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் துணை பிரதமர் பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டில் அரசியலில் சேருவதற்கு முன், தருமன் பொருளாதார நிபுணராகவும் அரசு நாணய நிதியத்திலும் பணியாற்றினார். இந்நிலையில், தருமன், எங் கோக் சாங், டான் கின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி உடையவர்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The post அதிபர் தேர்தல் சிங்கப்பூர் இந்திய வம்சாவளி தருமன் போட்டியிட தகுதி appeared first on Dinakaran.

Tags : Singapore ,Halima Yacob ,President of ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி