×

ஒரு கிமீ ரூ.251 கோடி செலவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதின் கட்கரி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி-அரியானாவை இணைக்கும் துவாரகா விரைவுச் சாலை செலவு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் மெகா மோசடி வெளியானது. ஒரு கிமீ தூரம் சாலை அமைக்க ரூ.18.20 கோடிக்கு பதில் ரூ.251 கோடி நிதி ஒதுக்கீடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சிஏஜிக்கு போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்த சர்ச்சைக்குக் காரணம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்குக் காரணமானவர்கள் யாரோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

The post ஒரு கிமீ ரூ.251 கோடி செலவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நிதின் கட்கரி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nitin Gadkari ,New Delhi ,CAG ,Dwarka Expressway ,Delhi- ,Aryana ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை அமலுக்கு வரும் முன்...