×

நசரத்பேட்டை ஆதிபராசக்தி கோயிலில் பால்குடம் ஏந்தி ஊர்வலம்: 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு

பூந்தமல்லி: நசரத்பேட்டை ஆதிபராசக்தி கோயிலில், 2 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்திய ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலையில் பால்குடங்களை சுமந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக நடந்து சென்றனர். இறுதியாக பால் குடங்களை சுமந்து வந்த பெண் பக்தர்களிடம் இருந்து பால் குடங்களை பெற்று அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், வினாயகர், சிவன், நாகாத்தம்மன், ஆதிபராசக்தி, அங்காளம்மன் உள்ளிட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மேலும், அம்மன் மற்றும் பத்ரகாளி வேடம் அணிந்து கொண்டு பக்தர்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post நசரத்பேட்டை ஆதிபராசக்தி கோயிலில் பால்குடம் ஏந்தி ஊர்வலம்: 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Adiparashakti ,Nasaratpet ,Poontamalli ,Nasarathpet ,Adiparashakti temple ,
× RELATED பரிவாக்கம் சந்திப்பு,...