×

பரிவாக்கம் சந்திப்பு, நசரத்பேட்டையில் மேம்பாலங்கள் கொண்டுவர முயற்சி செய்வேன்: காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ச.சசிகாந்த் செந்திலை ஆதரித்து திமுக மாவட்டச் செயலாளர் ஆவடி சாமு.நாசர் எம்எல்ஏ, ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ப.ச.கமலேஷ் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின்போது நாடாளுமன்ற திமுக தேர்தல் பொறுப்பாளர் இரா.கிரிராஜன் எம்பி, முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தாஸ், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பூவை ஜேம்ஸ், சிதம்பரம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் ராஜி, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வி.குமார், முத்தமிழ் செல்வன், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிதி ஜனார்த்தனன், நிர்வாகிகள் இளையான், புகழேந்தி, பாஸ்கர், வயலை பிரபாகரன், பிரகாஷ், சுரேஷ்குமார், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் திருமலைராஜ், ரவி, சங்கீதா சீனிவாசன், குமரேசன், சண்முகம், தணிகாசலம், கேசவன், திருலோகசுந்தர், ராம்பாபு, சாய்மோகன், ஸ்டாலின், சுமதி உள்பட பலர் கலர் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அப்போது வேட்பாளர் சத்திகாந்த் செந்தில் பேசுகையில், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரிவாக்கம் – பூந்தமல்லி சந்திப்பிலும், நசரத்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை கிடைக்கவும், 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தவும், ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத்து தேர்வு நடத்தவும், நேர்முக தேர்வு நடத்தவும் முயற்சி செய்வேன். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும், வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கவும் முயற்சி செய்வேன். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, மழை நீர் கால்வாய் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர தீவிரமாக முயற்சி செய்வேன் என வாக்குறுதி அளித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

The post பரிவாக்கம் சந்திப்பு, நசரத்பேட்டையில் மேம்பாலங்கள் கொண்டுவர முயற்சி செய்வேன்: காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Parivakkam ,Nasaratpet ,Congress ,Sasikanth Senthil ,Tiruvallur ,DMK District ,Aavadi Samus Nasar ,MLA ,Adi ,Dravidar Welfare Committee ,A. Krishnasamy ,Union ,B.S. ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு