- திமுக
- பணிக்குழு
- டி.ஜே கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- Kummidipoondi
- மாவட்ட செயலாளர்
- திருவள்ளூர் கிழக்கு
- கும்மிடிபூண்டி பஜார்
- அவசர பணிக்குழு கூட்டம்
![]()
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்றார். கும்மிடிப்பூண்டி பஜாரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், பேரூர் செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ரமேஷ், கதிரவன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், பொதுகுழு உறுப்பினர் முர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பரிமளம், மணிபாலன், ஆனந்தகுமார், சத்தியவேலு, சந்திரசேகர், சுகுமாறன், ரமேஷ் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து, மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் கலந்து கொண்டார். நீட் தேர்வு ரத்து செய்ய கோரி ஒன்றிய அரசை கண்டித்து மாணவரணி, இளைஞர் அணி, மருத்துவ அணி உண்ணாவிரதம் குறித்தும், வாக்குச்சாவடி பாக முகவர்கள் திருத்தம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். பின்னர், மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பேசும்போது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு திமுக 39 தொகுதியில் வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
வருகின்ற திங்கள்கிழமை திருவள்ளூர் நடக்கும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பேசினார். இதில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, மீஞ்சூர், எல்லாபுரம், சோழவரம், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
The post திமுக அவசர செயற்குழு கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.
