×

விசிக தலைவர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் 61வது பிறந்தநாளையொட்டி, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி விசிக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பேரூராட்சி செயலாளர் கலங்கரை காசி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் நரேஷ் முன்னிலை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் கலந்துகொண்டு பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார். இதில், கேசவன், பரதன், ஆட்டோ குட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருங்குழி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற விழாவிற்கு விசிக நிர்வாகி மூர்த்தி தலைமை தாங்கி, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கட்சி கொடி ஏற்றி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கருங்குழி பேரூர் செயலாளர் சமத்துவன், செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் கலை கதிரவன், தொண்டரணி மாநில துணை செயலாளர் தனு பார்த்தசாரதி, மற்றும் ராசகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விசிக தலைவர் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Vishik ,Madhurandakam ,Visika ,President ,Thol Thirumavalavan ,Achirupakkam Municipal Visika ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்