×

கொலம்பியாவை அடுத்தடுத்து தாக்கிய நில நடுக்கங்கள்: 6.3 ரிக்டராக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன

பொகடா: கொலம்பியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில நடுக்கங்களால் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறிய மக்கள் திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் இரண்டு சக்திவாய்ந்த நிலா அதிர்வுகள் பொகோட்டா நகரத்தை தாக்கினர். ரிக்டர் அளவுகோலின் முறையே 5.6 மற்றும் 4.8-ஆக பதிவான நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். பொகோட்டாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் சில பழமையான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. முக்கிய நகரங்களை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தால் கொலம்பியாவில் நாடாளுமன்ற கட்டடம் பகுதியளவு சேதமடைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கொலம்பியாவின் பேரிடம் மேலாண்மை படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

The post கொலம்பியாவை அடுத்தடுத்து தாக்கிய நில நடுக்கங்கள்: 6.3 ரிக்டராக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன appeared first on Dinakaran.

Tags : Colombia ,Bogotá ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தல்; கட்சி...