×

நத்தம் பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் படுகாயம்

நத்தம், ஆக. 18: நத்தம் பஸ் நிலையத்தில் பல்வேறு வணிக வளாக கடைகள் பேரூராட்சி மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த வணிக வளாகத்தில் உள்ள பழமையான மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இந்த மேற்கூடையில் குடகிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அழகர்சாமி நின்றிருந்தார். அப்போது, திடீரென மேற்கூரை பெயர்ந்து அவர் மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நத்தம் பஸ் நிலையத்தில் உள்ள மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் விரைந்து சேதமடைந்த மேற்கூரையை இடித்து விட்டு புதிய மேற்கூரை கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

The post நத்தம் பஸ் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Natham bus station ,Nadham ,Natham bus station.… ,Dinakaran ,
× RELATED நத்தத்தில் விற்பனைக்காக பதுக்கி...