×

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. பஞ்சாப் மாகாணம்,பைசலாபாத்தின் இசா நகரில் சால்வேஷன் ஆர்மி ஆலயம்,யுனைடெட் பிரஸ்பைட்டிரியன் ஆலயம் உள்ளிட்ட4 தேவாலயங்கள் வன்முறை கும்பலால் நேற்று அடித்து நொறுக்கப்பட்டது. கிறிஸ்தவர் ஒருவரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. பிஷப் ஆசாத் மார்ஷல் கூறுகையில்,‘‘ இந்த தாக்குதலின் போது பைபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இந்த சம்பவங்களை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்’’ என்றார்.

The post பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்கள் சூறை appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Lahore ,Punjab ,Salvation Army Church ,United Presbyterian ,Isa Nagar ,Faisalabad, Punjab ,Dinakaran ,
× RELATED லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல்