×

மியான்மர் சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு

நய்பிடாவ்: மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வகையில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

இந்த இடிபாடுகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த நிலையில், சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் நிலசரிவில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. தொடர் கனமழைக் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டாவது முறை நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்தாலும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மழைக்காலத்தில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்றும் அங்கிருந்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மர் சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Naypidao ,Jade ,Kachin ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...