×

குறைந்த விலை இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம்: S1X என்ற மாடல் அறிமுக விலையாக ரூ.80,000-க்கு விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா தொழிற்சாலையில் தயாராகும் குறைந்த விலை மின்சார இருசக்கர வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S1X என்ற புதிய மாடல் இ-ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போட்டி நிறுவனங்களை காட்டிலும் மிக குறைந்த விலையில் ரூ.80,000-க்கு இந்த இ-ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ வாட் பேட்டரியுடன் கூடிய ஓலா S1X ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்திற்கு சலுகை விலையிலான ரூ.80,000-க்கும், அதன்பிறகு ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள ஓலா பியூட்டர்ஸ் பேக்டரியில் இந்த மின்சார இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர். S1X+, S1X 3 கிலோவாட் பேட்டரி ஆகிய மாடல்களும் முதல் ஒரு வாரத்திற்கு சலுகை விலையில் விற்கப்படுகின்றன. புதிய மாடல் இ-ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் நடைபெற்று வருகிறது. S1X மாடல் இ-ஸ்கூட்டர்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும், அதிகப்படச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறைந்த விலை இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஓலா நிறுவனம்: S1X என்ற மாடல் அறிமுக விலையாக ரூ.80,000-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ola ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது