×

உரிய பாதுகாப்பு வசதியின்றி 38 கன்டெய்னரில் கொண்டு சென்ற வெடிபொருட்கள்: போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்

சென்னை: மணலி புது நகரில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாமல் 38 கன்டெய்னர் லாரிகளில் இருந்த வெடிபொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சென்னை அடுத்த மணலி புதுநகர் தனியார் குடோனில் வெடிமருந்து பொருட்கள் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்குச் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டிரான்ஸ்போர்ட் தொழில் செய்யும் சீனிவாசன் என்பவர், நாக்பூரில் இருந்து பல வகையான வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை 38 கன்டெய்னர் லாரியில் அடைத்து வைத்திருந்தார். அதை, போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் லாரியின் கதவுகளை திறந்து பார்த்து கண்டு பிடித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் விசாரித்தபோது, சரக்கு பெட்டகத்தில் வைக்க வேண்டிய வெடிபொருட்களை, தற்காலிகமாக குடோனில் வைத்துள்ளதாக தெரிவித்தார். அந்த குடோன் வெடிபொருள் வைப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என தெரிவித்து, உடனடியாக லாரிகளில் உள்ள வெடிபொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என போலீசார் உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து லாரிகளும் திருவொற்றியூரில் உள்ள கன்டெய்னர் சரக்கு பெட்டகம் ைவக்கும் பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

The post உரிய பாதுகாப்பு வசதியின்றி 38 கன்டெய்னரில் கொண்டு சென்ற வெடிபொருட்கள்: போலீசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Manali Pudu Nagar.… ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...